News April 22, 2025
திருமணத் தடை நீக்கும் சுயம்பு மூர்த்தி

தர்மபுரி மாவட்டம் அமானிமல்லாபுரம் பகுதியில் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாளித்து வரும் சுயம்பு மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் கல்வியில் சிறந்து விளங்கலாம் எனவும் கூறப்படுகிறது. திருமணத்தடை உள்ள நண்பர்களுக்கு இதை சேர் செய்யவும்..,
Similar News
News October 15, 2025
தருமபுரி மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அக்.15 அன்று இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ரோந்து அதிகாரியாக குணவரமன், டி.எஸ்.பி. (DCRB) நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி, ஹரூர், பென்னாகரம், பாலக்கோடு பிரிவுகளுக்கான காவல் நிலையங்களில் பொறுப்பேற்ற அதிகாரிகளின் பெயர், மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
News October 15, 2025
புதிய பேருந்து சேவை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நான்கு வழித்தடங்களில் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பேருந்து சேவை அக்.14 இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆட்சியர் ரெ.சதீஸ் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆ.மணி எம்பி, லட்சுமி நாட்டான் மாது, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News October 15, 2025
பூங்கா திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வைர விழா பூங்கா திறப்பு விழா இன்று அக்.14 நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி எம்பி மணி கலந்து கொண்டனர்.