News April 3, 2025
திருமணத் தடை நீக்கும் அரியலூர் கார்க்கோடேசுவரர் கோயில்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இந்த காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் உள்ளது. இது சுந்தரச் சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் மூலவர்கள் கார்க்கோடேசுவரர் மற்றும் இறைவி பாலாம்பிகை ஆவார். நாகங்களின் அரசரான கார்க்கோடன் இறைவனை வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்டால் திருமணத் தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் அமையும், மேலும் குழந்தை பேறு மற்றும் பிரிந்த தம்பதி மீண்டும் சேருவர். இதை பகிரவும்
Similar News
News July 5, 2025
அரியலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் அரியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
அரியலூர்: தொழில் தொடங்க கடன் உதவி

அரியலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த <
News July 5, 2025
ஜெயங்கொண்டத்தில் பெண் நள்ளிரவில் தற்கொலை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு, உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ரமேஷ் என்பவரது மனைவி ஷபிராபேகம் நள்ளிரவில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது, இது குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.