News April 24, 2025

திருமணத்தடை நீங்கும் முக்தீஸ்வரர்

image

காஞ்சிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் அருள்பாளித்து வரும் முக்தீஸ்வரரை மனமுருகி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 25, 2025

காஞ்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம்

image

தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில் காஞ்சிபுரம் முக்கியமானது. ஆனால், இங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக உள்ளனர். ஆம், 2023-ல் வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, 2024-ல் ஆய்வாளர் ஷ்யாமளா, கடந்த பிப்ரவரி மாதம் கண்ணன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் என கடந்த ஒன்றறை ஆண்டுகளில் 4 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர். *இப்படி தலை விரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க இந்தியன் தாத்தா வரணுமோ?*

News April 25, 2025

காஞ்சி: நீதிபதி என கூறி பல லட்சங்கள் மோசடி

image

காஞ்சி மாநகராட்சியை சேர்ந்தவர் அருண் சூர்யா(28), வக்கீல். இவர் மோகன் என்பவரிடம் தான் சென்னை கோர்ட்டில் நீதிபதியாக உள்ளதாகவும் தன்னால் அவரது மகனுக்கு மெட்ரோவில் வேலை வாங்கி தரமுடியும் எனவும் கூறி ரூ.9 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் அருண் சூர்யாவை கைது செய்து,மேலும் பலரிடம் ஏமாற்றிய பல லட்சங்களை மீட்டுள்ளனர். *அரசு வேலை நாடும் நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்

News April 24, 2025

120 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சி குடில்

image

காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.வி.என். பிள்ளை தெருவில் அமைந்துள்ள காஞ்சி குடில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குடில் தற்போது அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் தலைமுறை மக்கள் பயன்படுத்திய வீட்டு உபகரணங்கள், ஆடைகள், நாணயங்கள் மற்றும் பிற அன்றாட உபயோகப் பொருட்களை காணலாம்.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!