News March 20, 2025

திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

image

திருப்பூர், முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் ராக்கியாபாளையம் பகுதியில் பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவியும், பால்கடைக்கு வியாபாரம் பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டில் பின்பக்கம் வழியாக உள்ளே சென்ற மர்மநபர், ரூ.85 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News

News March 28, 2025

திருப்பூர்: இராமயண காலத்து கோயில்

image

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு இருந்த சிவனை வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.

News March 28, 2025

சக்தி வாராஹி அம்மன் கோவில் பற்றி தெரியுமா?

image

உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நடைபெறும். இவ்விழாவிவின் முதல் நாள் நிகழ்வாக காலை கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹூதி நடைபெறும்.மாலை சங்கல்பம், கலச வழிபாடு, பூர்ணாஹூதி நடைபெறும். இக்கோயில் சென்று வழிப்பட்டால் கேட்ட வரத்தை அம்மன் அருள்வார். ஷேர் செய்யவும்.

News March 28, 2025

+2 மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு +2 பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் & வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் & ஆலோசனை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 240ல் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது  என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!