News October 25, 2024
திருப்பூர்: ரூ.10 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

வெள்ளகோவிலில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை அமைச்சர் சாமிநாதன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி 15ஆவது நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, வருமுன் காப்போம் ஆகிய திட்டங்களின் கீழ் 6 பணிகளை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 27, 2025
திருப்பூர்: FB, WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 27, 2025
திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.