News April 18, 2025
திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *
Similar News
News November 2, 2025
திருப்பூர் அருகே சிறுவன் கொலை?

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் ரோபிக். இவர் குடும்பத்துடன் திருப்பூர் காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் பகுதியில் உள்ள நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 9 வயது மகன். மில் குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 2, 2025
திருப்பூர்: போதையில் வீட்டுக்கு தீ வைப்பு

திருப்பூர், கல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்த செல்லப்பா வீட்டிற்கு தீ வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
திருப்பூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க

திருப்பூர்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


