News August 7, 2024
திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 9, 2025
திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
News November 9, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகர உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய போலீசார், பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 8, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


