News August 9, 2024

திருப்பூர் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

image

அரசு பள்ளியில் பயின்ற உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கக்கூடிய தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் இத்திட்டத்தினை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.

Similar News

News October 27, 2025

BREAKING: திருப்பூரில் நாளை இங்கு கடையடைப்பு

image

மாநகராட்சி குப்பை விவகாரத்தில் ஏற்கெனவே இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம் கிராமங்களில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடந்த ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தில் மேலும் 2 கிராமம் ஆன கரைப்புதூர், இடுவம்பாளையம் கிராமமும் போராட்டத்தில் கைகோர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன் இப்பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News October 27, 2025

திருப்பர்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News October 27, 2025

வைட்டமின்-ஏ திரவம் இன்று முதல் வழங்கல்

image

திருப்பூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று அக்.27 முதல் நவ.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 14 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!