News March 6, 2025
திருப்பூர் போலீசின் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.03.2025) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், அவினாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அவசர அழைப்புக்கு 108 ஐ அழைக்கவும்.
Similar News
News March 8, 2025
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழ வியாபாரி பலி

காங்கயம் – கோவை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (65). இவர் தாராபுரம் சாலையில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தாராபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 8, 2025
திருப்பூரில் ரூ.99 லட்சம் பரிசு அறிவிப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
News March 8, 2025
திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

இந்துக்கள் கோயில் கட்ட ஜமாத் அமைப்பினர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்டுவதற்கு, தானமாக நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள், குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.