News May 17, 2024
திருப்பூர்: போக்குவரத்து நெரிசல்… மக்கள் அவதி

காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
Similar News
News November 27, 2025
திருப்பூர்: FB, WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 27, 2025
திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.