News January 23, 2025
திருப்பூர் புத்தக திருவிழா இன்று தொடக்கம்!

திருப்பூரில் 21வது புத்தக கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 140 ஸ்டால்களில் 75க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இந்த கண்காட்சி இன்று தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள, உங்கள் பிள்ளைகள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள செய்தியை share செய்யுங்கள்.
Similar News
News November 22, 2025
திருப்பூர் கொலை: பரபரப்பு தீர்ப்பு!

திருப்பூரில் 2018 ஆம் ஆண்டு போயம்பாளையம் பகுதியில் கணேசன், 2020 ஆம் ஆண்டில் வெங்கமேட்டில் அன்பரசன், கல்லூரி சாலையில் முத்து ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர் மீதான வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், சங்கருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள், நேற்று முந்தினம் இரவு கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது தாராபுரம் சாலை என்.காஞ்சிபுரம் செங்காட்டு தோட்டம் அருகே வந்தபோது, திடீரென நிலை தடுமாறி கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஐவரும் படுகாயமடைந்தனர். இதில் ஒரு மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 21.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


