News October 24, 2024
திருப்பூர்: தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் மங்களூர் சிறப்பு ரயில் வருகின்ற இரண்டாம் தேதி இரவு 11:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த ரயில் மூன்றாம் தேதி காலை திருப்பூருக்கு 6.40 மணிக்கு வந்து சேரும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 20, 2025
அலங்கியத்தில் பள்ளி மாணவி தற்கொலை!

திருப்பூர் அலங்கியம் காந்திநகர் பகுதியை சேர்ந்த புகழ்மதி (15). இவர் அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் புகழ்மதி நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் உங்கள் மதி பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண்.439) நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் மனிஷ் தெரிவித்தார். ஷேர் செய்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க!
News November 19, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


