News March 12, 2025
திருப்பூர்: சுக்ரீஸ்வரர் கோயில்!

திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இங்கு பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் உள்ளன. கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்ட சுக்ரீஸ்வரரை, நாம் வணங்கினால் நினைத்து நடக்குமாம்.
Similar News
News March 13, 2025
மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
News March 12, 2025
இரவு நேர ரோந்து பணியில் காவல் அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
News March 12, 2025
காடையூர் அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காடையூர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (68). மூதாட்டியான இவர், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் இன்று அதிகாலை புகுந்த வெறி நாய்கள், பட்டியில் இருந்த 4 வெள்ளாடுகளை கடித்து குதறியது. இதில் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.