News March 23, 2025

திருப்பூர் சுகாதாரத்துறையில் வேலை!

image

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்.<<>>

Similar News

News November 17, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ஜெயபாலன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 16, 2025

கேட்பாரற்ற பையில் இருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பையை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 9.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 16, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (16.11.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரர்களின் தொடர்பு எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்கு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் வழங்கவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!