News March 21, 2024
திருப்பூர்: சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருப்பூர் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்த திருமூர்த்தி, அழகன் ஆகிய இருவரும் நேற்று (மார்ச்.20) இரவு உடுமலை மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையில், பழனி செல்லும் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 15, 2025
திருப்பூரில் உள்ள இமயமலை!

திருப்பூர்: காங்கேயம் வட்டத்தில் உள்ளது சிவன்மலை. இமயமலையை சிவபெருமான் வில்லாக வளைத்து அசுரர்களை அழித்தபோது அதிலிருந்து விழுந்த சிறுதுண்டு தான் இந்த சிவன் மலை எனும் புராணக் கதை உண்டு. இந்த மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி பக்தர்களின் கனவில் வந்து உத்தரவு தருவாராம். அப்படி உத்தரவு தரும் பொருளுக்கும் நடக்கவிருக்கும் உலக நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். SHARE பண்ணுங்க!
News April 15, 2025
திருப்பூர்: அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, திருப்பூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய <
News April 15, 2025
திருப்பூர்: கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராபித்ரா பிஸ்வால் (47). இவர், திருப்பூர், பொங்கலூர் மீனாட்சிவலசில் உள்ள, பனியன் கம்பனியில், வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ராபித்ரா பிஸ்வால், மருதுரையான் வலசில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.