News December 5, 2024
திருப்பூர் கொலை: மேலும் 5 தனிப்படைகள் அமைப்பு

பொங்கலூர் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி அலமேலு இவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும், கடந்த மாதம் 29ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மேலும் ஐந்து தனிப்படைகள் அமைத்து மொத்தம் 16 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News November 15, 2025
திருப்பூரில் இரவு நேர வந்து பணியில் காவலர்கள்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் இன்றைய தினம் அனுப்பர்பாளையம் சரக உதவி ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ருசிகேஸ் புயான்(29) என்பதும், அவரிடம் 3 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News November 15, 2025
திருப்பூர்: Bank of India வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை(BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: 17.11.2025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <


