News February 17, 2025

திருப்பூர்: கல்விக்கடன் ரூ.307 கோடி வழங்க இலக்கு

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக் டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-26 நிதியாண்டுக்கான திருப்பூர் மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், 2025-26ம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

திருப்பூரில் சோகம்: இளைஞர் விபரீத முடிவு

image

சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜவேல். இவர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தைக்கு செல்ஃபோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் மாத சம்பளம் செலவுக்கு சரியாக இருந்தால், செல்போன் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த ராஜவேல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

News September 13, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின், அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை, பல்லடம், அவிநாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News September 13, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி , ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், சேடர்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நிலாக்கவுண்டன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!