News March 14, 2025
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களே உடனே பதிவு செய்யுங்க. Share பண்ணுங்க.
Similar News
News March 14, 2025
தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி கோயில்!

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.
News March 14, 2025
திருப்பூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று மார்ச் 13 இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும்.
News March 14, 2025
திருப்பூர் பொதுமக்களுக்கு தொலைப்பேசி எண் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட முழுவதும் உங்கள் பகுதியில் உள்ள மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை இனி வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம் என மண்டலங்கள் வாரியாக எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவித்துள்ளன. அந்த வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் 0091 9442111912 பொதுமக்கள் இனி வரும் காலங்களில் இருந்த இடத்தில் இருந்தே புகார் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பு.