News March 29, 2024

திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

Similar News

News December 1, 2025

திருப்பூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 1, 2025

திருப்பூரில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்!

image

திருப்பூரில் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த மாதம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையின் போது பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சிங் என்பவரும் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

News December 1, 2025

திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!