News April 10, 2025
திருப்பூர்: கட்டளை மாரியம்மன் கோயில்!

திருப்பூர் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின், அடர்ந்த வனத்தின் நடுவில், புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக, பாறையில் தோன்றிய மாரியம்மன், சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாக வீற்றிருக்கிறார். அம்மனை வனங்கினால் அனைத்து துன்பங்களும் நீங்குமாம். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், சகல வலிகளையும் போக்க வல்லதாம். இத SHARE பண்ணுங்க.
Similar News
News November 25, 2025
வெள்ளகோவில்: 40 ஆண்டுக்கு பின் கைது! ஷாக்கான மக்கள்

திருப்பூர், வெள்ளகோவில் அடுத்த தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (75). இவர் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரில் முதியவர் செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கிளீனிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.
News November 25, 2025
திருப்பூரில் இளஞ்சிறாருக்கு நூதன தண்டனை

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்டது தாடிகார் முக்கு பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலராஜா என்பவர் கொலை வழக்கில் இளம் சிறார் பிடிக்கப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இளைஞர் நீதி குழும நடுவர் செந்தில்ராஜா. இளஞ்சிரார் 6 மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனை அவசர பிரிவில் மருத்துவர்கள் கூறும் வேலையை செய்ய தண்டனை விதித்துள்ளார்.
News November 24, 2025
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 283 மனுக்கள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் 283 மனுக்களை வழங்கியுள்ளனர். மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதனை விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார்


