News February 17, 2025
திருப்பூர் உற்பத்தி துறையினருக்கு மோடி பாராட்டு

டெல்லியில் மத்திய அரசின் சார்பில் பாரத் டெக்ஸ் 2025 என்ற பெயரில் சர்வதேச அளவில் பின்னலாடை மற்றும் ஜவுளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர் தொழில் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்வை மேற்கொண்ட பிரதமர் மோடி திருப்பூரின் ஜீரோ டிஸ்சார்ஜ் மறுசுழற்சி உள்ளிட்ட முறைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 283 மனுக்கள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் 283 மனுக்களை வழங்கியுள்ளனர். மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதனை விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார்
News November 24, 2025
காங்கேயம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ரோந்து சென்ற போலீசார் பரஞ்சேர்வழி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணி (58) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 24, 2025
வெள்ளகோவிலில் ரூ.270-க்கு முருங்கை விற்பனை

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் முருங்கை மொத்த சந்தை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று வட்டார விவசாயிகள் 1 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில் மர முருங்கை கிலோ ரூ.120-க்கும், செடி முருங்கை ரூ.150-க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.270-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.


