News April 20, 2025

திருப்பூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News November 26, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம், ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அருள்புரம், தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், செட்டித்தோட்டம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், குன்னாங்கல்பாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்புச்சிபாளையம், காளிநாதம்பாளையம், அவரப்பாளையம், அய்யம்பாளையம், நொச்சிபாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 26, 2025

வெள்ளகோவிலில் வெங்காய விலை கிடுகிடு உயர்வு

image

வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்னவெங்காயம் விற்பனை விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ ரூ.35-40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.50-52 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!