News November 25, 2024
திருப்பூர் அருகே கத்திக்குத்து

மன்னார்குடியை சேர்ந்தவர் பிரபாகரன், 33. இவரது தம்பி ராஜசேகர், 26. இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இருவரும் பலவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். தற்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தகராறு ஏற்பட்டது. அண்ணன் தம்பியை கத்தியால் குத்தியுள்ளார். தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, விஸ்வாபாரதி நகர், தேவம்பாளையம், கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி,வி நகர், திருநீலகண்ட வீதி, நெசவாளர் காலனி, கமிட்டியார் காலனி, வெங்கடாஜலபதி நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 9, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(56). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக வஞ்சிபாளையம் சோமனூர் இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 9, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


