News April 23, 2025
திருப்பூர்: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
திருப்பூரில் கொலை! அதிரடி உத்தரவு

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியனிடம் பீடி கேட்டு ஏற்பட்ட தகராறில் கடந்த ஜூலை மாதம், 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் அவரை கொலை செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2 ஆண்டுகள் இருவரையும் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News December 9, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 9, 2025
தாராபுரத்தில் சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டினத்தைச் சேர்ந்த செல்லதுரை என்ற கூலித் தொழிலாளியின் மகள் தாரணி. இவர் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


