News April 15, 2025

திருப்பூர்: அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, திருப்பூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய <>இந்த லிங்கை <<>>க்ளிக் பண்ணுங்க.

Similar News

News November 19, 2025

திருப்பூரில் சிறுமிக்கு கொடூரம்: டெய்லர் அதிரடி கைது

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வடக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தையல் தொழிலாளி ராமச்சந்திரனை கைது செய்தனர்.

News November 19, 2025

திருப்பூர் சிறப்பு ரயில் இயக்கம்

image

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பராவுனிக்கு இன்று புதன்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பராவுனி (06195) சிறப்பு ப்பு ரெயில் ரயில் நேற்று மாலை 4 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பராவுனியை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 18.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை,பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

error: Content is protected !!