News March 15, 2025
திருப்பூர்:பின்னலாடை தொழிற்கான அறிவிப்பு எதுவும் இல்லை

தமிழக அரசு பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கான அறிவிப்பு இடம்பெறாததால் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில கோரிக்கையின் போது திருப்பூருக்கு ஏதாவது அறிவிப்பு வருமா என தொழில் துறையினர் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால் தனியாக பின்னலாடை தொழிலில் உள்ள நிறுவனங்களின் கோரிக்கைகள் இடம் பெறவில்லை என தெரிவித்தனர்.
Similar News
News March 15, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று (மார்ச் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை தெரிவிக்கலாம்.
News March 15, 2025
கருவலூர் மாரியம்மன் கோயில்

திருப்பூர் அவிநாசியை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.
News March 15, 2025
தமிழகத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை!

2024 -ம் ஆண்டின் உலக காற்றுத் தர அறிக்கையில், IQAir நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், குறைந்த காற்று மாசுபட்ட நகரங்களில் திருப்பூர் இடம் பெற்று தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் திருப்பூர் தெற்கு ஆசியாவில் 15- வது இடமும், இந்தியாவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்கு ‘வனத்துக்குள் திருப்பூர்’ பங்கு முக்கியமானது குறிப்பிடதக்கது.