News August 16, 2024
திருப்பூருக்கு இனி HAPPYதான்

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
திருப்பூர்:10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!
News December 4, 2025
திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழக்கரை, சீனிவாசபுர்ம், ராக்கியாபாளையம், முத்துச்செட்டிபாளையம், மடத்துப்பாளையம், கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 4, 2025
திருப்பூரில் அதிரடி மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.


