News March 26, 2025
திருப்பூரில் SSLC பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயார்

திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து 235 மாணவ, மாணவியர் பொது தேர்வை எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவுபெற்று தயார் நிலையில் உள்ளன.
Similar News
News December 6, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் கிழக்கு, இடுவாய் கிழக்கு, வஞ்சிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 6, 2025
இரவு ரோந்து போலீசார் பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (5.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, குடிமங்கலம், செய்யூர், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 5, 2025
திருப்பூரில் ஆச்சர்யம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பூரில் உள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்ற வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


