News August 16, 2024
திருப்பூரில் 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
88 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர்களை பணி அமர்த்திய 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
Similar News
News December 9, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(56). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக வஞ்சிபாளையம் சோமனூர் இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 9, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
திருப்பூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்ட காவல்துறை, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்புவது சட்டவிரோதம் என்றும், இதனால் சமூக அமைதி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உண்மைதன்மை உறுதி செய்யாமல் தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. தவறான செய்திகள் பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


