News August 25, 2024

திருப்பூரில் 21 மாணவ, மாணவிகள் MBBS படிக்க தேர்வு

image

நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த 31 பேர் பங்கேற்றனர். இதில் 21 பேர் எம்பிபிஎஸ் படிக்கவும், ஆறு பேர் பல் மருத்துவம் படிக்கவும் கல்லூரிகளை நேற்று தேர்வு செய்தனர்.

Similar News

News October 16, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் கொள்ளை உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க இன்றைய தினம் போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேரம் வந்து பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கேயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 16.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

News October 16, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எஸ் ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் அக்.22,29, நவ. 5, 12,19, 26, டிச. மாதத்தில் 3, 10 மற்றும் 17-ம் தேதிகளில் மதியம் 2 முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

error: Content is protected !!