News March 25, 2025

திருப்பூரில் விவசாயிகள் 43 பேர் மீது வழக்கு

image

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News October 23, 2025

திருப்பூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 23, 2025

திருப்பூர்: வட மாநில வாலிபர் கொலை

image

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில் குமார் ஜனா. போயம்பாளையம் அடுத்த கங்கா நகர் பகுதியில் உள்ள பனியன் சாய தொழிற்சாலையில் பணிபுரிந்து விடுதியில் தங்கி வருகிறார். இவருக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அம்ரித் , அமான் உள்ளிட்ட 3 பேருக்கும் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேரும் அனில் குமார் ஜனாவை கட்டையால் அடித்து கொலை செய்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

News October 23, 2025

திருப்பூர்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திருப்பூர் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!