News August 24, 2024
திருப்பூரில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் 1 பகுதியாக திருப்பூர்-காங்கேயம் சாலையில் தனியார் பள்ளி முன்பு இருந்து விஜயாபுரம் பகுதி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Similar News
News November 20, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண்.439) நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் மனிஷ் தெரிவித்தார். ஷேர் செய்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க!
News November 19, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 19, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, வளையங்காடு, முருங்கப்பாளையம், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், சாமிநாதபுரம், அண்ணா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, பத்மாவதிபுரம், கஞ்சம்பாளையம், சின்னபொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


