News February 16, 2025

திருப்பூரில் வங்கதேசத்தினர் 3 பேர் கைது

image

திருப்பூரில் கடந்த ஒன்றரை மாதத்தில் 107 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் வங்கதேசத்தில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை செய்ததில், நோடி(36), சல்மா(20) சாகஜலால் காஜி(27) என 3 பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது. இதனையடுத்து 3 பேரை கைது செய்தனர்.

Similar News

News November 6, 2025

திருப்பூர்: ரேஷன் கார்டில் பிரச்சனையா?

image

திருப்பூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி ரேஷன் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்று, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு பதிவு செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

News November 6, 2025

திருப்பூரில் இளைஞர் தற்கொலை

image

திருப்பூர், வேலம்பாளையம் தொகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(27). உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுபாஷ் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 6, 2025

திருப்பூரில் வாகனங்களை நிறுத்த திடீர் தடை

image

திருப்பூர் மாநகரின் வளர்மதி அருகே சுரங்க பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நிறுத்த தடை செய்யப்பட்டு போலீசார் சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது

error: Content is protected !!