News May 7, 2025
திருப்பூரில் ரூ.22,000 சம்பளத்தில் வேலை!

திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Similar News
News December 21, 2025
திருப்பூருக்கு பெருமை: தட்டித்தூக்கிய நிறுவனங்கள்!

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக, நாடு முழுவதும் ஜவுளி ஏற்றுமதியில் சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த 11 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஏற்றுமதி, சிறந்த செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
மூலனூர்–தாராபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்து

திருப்பூர் மாவட்டம் டிசம்பர் 20 இன்று விபத்து .விபத்தானது மூலனூர் டு தாராபுரம் சாலை தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி மூலனூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் யார் என்று விவரம் தெரியவில்லை .மூலனூர் காவல்துறை விசாரணை
News December 21, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர், கூலிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த, சரவணன் என்பவரை கைது செய்தனர்.


