News August 14, 2024

திருப்பூரில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு 

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்படக்கூடாது. இதனையும் மீறி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 4, 2025

திருப்பூர் அருகே சோக சம்பவம்!

image

திருப்பூர் இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி பேபி. ஆறுமுகம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு வந்த இவர், சிகிச்சை பலன் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 4, 2025

திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டால், நிச்சயம் குணமாகுமாம்.

News December 4, 2025

திருப்பூர்: டிகிரி போதும் வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) காலியாகவுள்ள Admin. Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.29.200 வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!