News August 25, 2024
திருப்பூரில் போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், முதலிபாளையம் சிட்கோவில் இன்று கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இதில், திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாதன் கலந்து கொண்டார்.
Similar News
News November 16, 2025
திருப்பூரில் பெண் அதிரடி கைது!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் காளியம்மாள் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 16, 2025
திருப்பூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும்.
News November 15, 2025
திருப்பூரில் இரவு நேர வந்து பணியில் காவலர்கள்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் இன்றைய தினம் அனுப்பர்பாளையம் சரக உதவி ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


