News March 19, 2024

திருப்பூரில் பெண் மீது தாக்குதல்

image

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பாஸ் அலி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது அக்காவை அடித்து காயப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 18) குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாஸ் அலிக்கு 6 மாதம் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Similar News

News November 24, 2025

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 283 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் 283 மனுக்களை வழங்கியுள்ளனர். மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதனை விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார் ‌

News November 24, 2025

காங்கேயம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ரோந்து சென்ற போலீசார் பரஞ்சேர்வழி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணி (58) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 24, 2025

வெள்ளகோவிலில் ரூ.270-க்கு முருங்கை விற்பனை

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் முருங்கை மொத்த சந்தை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று வட்டார விவசாயிகள் 1 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில் மர முருங்கை கிலோ ரூ.120-க்கும், செடி முருங்கை ரூ.150-க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.270-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!