News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
திருப்பூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

திருப்பூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பாரமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், பழக்கரை, தேவம்பாளையம், கைகாட்டிப்புதூர், மங்கலம், பூமலூர், மலைக்கோவில், பள்ளிபாளையம், இடுவாய், வேலாயுதம்பாளையம், பெருந்தொழுவு, அலகுமலை, நாச்சியன்கோவில், கண்டியன்கோவில், கந்தாம்பாளையம், ஆண்டிபாளையம், விஜயாபுரம், கோவில்வழி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News August 12, 2025
திருப்பூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்!

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.