News November 24, 2024
திருப்பூரில் பள்ளி மாணவர்களால் ஏற்பட்ட பரபரப்பு

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், பஸ் நிலையத்துக்குள் அங்குமிங்கும் ஓடினார்கள். உடனடியாக அங்கிருந்த தெற்கு போலீஸார் விரைந்து சென்று மாணவர்களைப் பிடிக்க துரத்தினார்கள். அதற்குள் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடித் தப்பினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியில் மங்களம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கட்டிராஜா மற்றும் திருமூர்த்தி ஆகியோரிடம் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.