News November 22, 2024
திருப்பூரில் நாளை வாக்காளர் பட்டியல் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 16 மற்றும் 17ஆம் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) (ம) நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் இன்று மண்டலம் இரண்டு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பஸ் ஏற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News October 18, 2025
திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பாலன் (26). பனியன் கம்பெனி ஊழியர். இந்நிலையில் நேற்று பல்சர் பைக்கில் பாலன் சென்றுள்ளார். அப்போது தனியார் பேக்கரி அருகே திரும்பிய போது, எதிரே வந்த லாரி பாலன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 18, 2025
திருப்பூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <