News March 19, 2024
திருப்பூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 13, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி , ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், சேடர்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நிலாக்கவுண்டன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News September 13, 2025
திருப்பூர்:அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று தாந்தோணி கோபால்சாமி என்பவரின் தோட்டத்தின் அருகில் கரை ஒதுங்கி உள்ளது. இவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை. மார்பின் நடுவே ஆபரேஷன் பண்ணிய பழைய காயத் தழும்பு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News September 13, 2025
திருப்பூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <