News August 7, 2024
திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணி தீவிரம்

ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. திருப்பூர் புதூர் பிரிவு பகுதியில் மோகன் என்பவர் தனது இல்லத்தில் இருந்தவாறு தேசிய கொடிகளை உற்பத்தி செய்து வருகிறார். 10 இன்ச் முதல் 60 இன்ச் வரை தயாரிக்கப்படும் தேசியக்கொடிகள் 25 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Similar News
News November 19, 2025
ஊத்துக்குளி அருகே வசமாக சிக்கிய மூவர் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்று பகுதியில் கடந்த 17ஆம் தேதி முத்துக்குமார் என்பவரின் செல்போன் திருடப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் செல்போனை பறித்துச் சென்ற கபிலன் , வெற்றிச்செல்வன் மற்றும் ராகுல் ஆகியோரை கைது செய்து குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
News November 19, 2025
திருப்பூரில் சிறுமிக்கு கொடூரம்: டெய்லர் அதிரடி கைது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வடக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தையல் தொழிலாளி ராமச்சந்திரனை கைது செய்தனர்.
News November 19, 2025
திருப்பூர் சிறப்பு ரயில் இயக்கம்

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பராவுனிக்கு இன்று புதன்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பராவுனி (06195) சிறப்பு ப்பு ரெயில் ரயில் நேற்று மாலை 4 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பராவுனியை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.


