News August 26, 2024

திருப்பூரில் தீ பிடித்து எரிந்த இ-பைக்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை பருவாய் சாலையில் ஒரு இ-பைக் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வாகன ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 8, 2026

திருப்பூர் அருகே போலீஸ் குவிப்பு

image

பெருமாநல்லூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை நீதிமன்ற உத்தரவு படி நேற்று அதிகாரிகள் அற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 8, 2026

திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள். (SHARE)

News January 8, 2026

BREAKING திருப்பூர்: தேர்வில் தோல்வியால் தற்கொலை

image

திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி சரவணகுமார் -சிவசங்கரி தம்பதியின் மகள் தக்சிதாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கண்டித்ததால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

error: Content is protected !!