News August 7, 2024

திருப்பூரில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

image

திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இதனை, மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Similar News

News August 11, 2025

திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை

image

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மற்றும் விடுதிகளுடன் கூடிய மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

திருப்பூரில் அரசு வேலை: சூப்பர் சம்பளம் APPLY NOW !

image

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 67 செவிலியர் பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 18.08.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். திருப்பூர் மக்களே, வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 11, 2025

திருப்பூர்: உங்க ஊர் தாசில்தார் Phone Number

image

▶️திருப்பூர் தெற்கு – 0421-2250192. ▶️திருப்பூர் வடக்கு – 0421-2200553. ▶️அவிநாசி – 04296-273237. ▶️பல்லடம் – 04255-253113. ▶️காங்கேயம் – 04257-230689. ▶️உடுமலை – 04252-223857. ▶️மடத்துக்குளம் – 04252-252588. ▶️ஊத்துக்குளி – 04294-260360. ▶️தாராபுரம் – 04258-220399. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!