News April 1, 2025
திருப்பூரில் கனமழை அறிவிப்பு!

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 4, 5 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News October 29, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.10.2025 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, காங்கேயம் ஆகிய பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையை தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும்.
News October 29, 2025
திருப்பூர்: பட்டம் படித்தால் ரூ.65,000 சம்பளம்!

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <
News October 29, 2025
தாயிடம் ஆசி பெற்ற துணை ஜனாதிபதி

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது இல்லத்திற்கு சென்ற அவர் தனது தாய் ஜானகி அம்மாளிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மகிழ்ச்சியுடன் விபூதியை நெற்றில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.


