News August 3, 2024
திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி காங்கேயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
திருப்பூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலாமணி (55). இவர் வீட்டில் இருந்தபோது ஹீட்டர் மூலமாக வெந்நீரை சுட வைத்ததாக தெரிகிறது. அப்போது சுவிட்சை ஆப் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 8, 2026
திருப்பூர் அருகே போலீஸ் குவிப்பு

பெருமாநல்லூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை நீதிமன்ற உத்தரவு படி நேற்று அதிகாரிகள் அற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News January 8, 2026
திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <


