News August 24, 2024
திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

➤திருப்பூரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முக பாண்டியராஜன், சத்தி ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. ➤மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் வேளாண் வட்டார மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறுஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் துப்பாக்கி சுடும் போட்டியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். ➤முதல்வர் கோப்பைக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.
Similar News
News October 23, 2025
திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 இருசக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்களை நாளை (24ஆம் தேதி) நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவர்கள் நேற்று முதல், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே SHARE பண்ணுங்க!
News October 23, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், வெங்கநாயக்கன்பாளையம், பெத்தம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு (ம) வடக்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம், எல்லப்பாளையம் புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News October 23, 2025
திருப்பூரில் இன்று தண்ணி வராது

திருப்பூர் மாநகராட்சிக்கு 3-வது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் திட்ட பணிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதன் காரணமாக இன்றைய தினம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்றாவது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.