News April 7, 2025
திருப்பூரில் ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதி குறவர் காலணியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள சூழ்நிலையில் அதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News July 11, 2025
திருப்பூர்: நடிகர் சிவா பேட்டி

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் அமைந்துள்ள அருணோதயா தியேட்டரில் பறந்து போ படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் ரசிகர்களிடம் திரைப்படத்தின் கருத்துக்களை கேட்க நடிகர் சிவா அங்கு வந்தார். மேலும் திரைப்படத்தை பார்த்த பொதுமக்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் கூறுகையில், உலக அரசியலில் தான் ஈடுபடப் போவதாகவும், நானே அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.
News July 10, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News July 10, 2025
ஆசிரியர் வேலை வேண்டுமா?

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12-ம் தேதி வரை <