News April 7, 2025

திருப்பூரில் ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்

image

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதி குறவர் காலணியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள சூழ்நிலையில் அதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News

News April 17, 2025

திருப்பூர்: விபத்தில் ஒருவர் பலி!

image

திருப்பூர், பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 16, 2025

திருப்பூர்: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!