News April 8, 2024
திருப்புகலூர்: பெண் மயக்கமடைந்து கீழே விழுந்து சாவு

திருப்புகலூர் காசிநாதன் மனைவி ஆனந்தவள்ளி (வயது 54). இவர் நேற்று தனது மகளின் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் ஏறி வந்துள்ளார். வரும் வழியில் திடீரென ஆனந்தவள்ளிக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் இன்று உயிரிழந்தார். திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள்<
News April 19, 2025
நினைத்ததை நடத்தும் அருள்மிகு நவநீதேஸ்வரர்

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ளது அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில். நினைத்ததை வேண்டி சாமிக்கு விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் திருமண பிரச்சனை, குடும்ப பிரச்சனை, கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி போன்ற நாட்கள் மிக சிறப்பான நாட்களாகும். சேர் செய்யவும்
News April 18, 2025
நாகை:ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.